வணிகர்கள் தாக்கல் செய்ய வேண்டிய படிவங்கள் மற்றும் அனுப்ப வேண்டிய இணைப்புகள்
1.7.2016 முதல் தமிழ் நாடு பொது விற்பனை வரிச் சட்டம் 2006 மற்றும் மத்திய விற்பனை வரிச் சட்டம் 1956 ஆகியவற்றுக்கு தாக்கல் செய்ய வேண்டிய படிவங்கள் மற்றும் இணைப்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மாதாந்திர விற்பனை அடிப்படையில் வரி செலுத்துவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள 29 இணைப்புகளில் எந்தெந்த இணைப்புகளில் மாத்திரம் கொள்முதல் அல்லது விற்பனை இருக்கின்றதோ அவற்றை மாத்திரம் சமர்ப்பித்தால் போதுமானது. ஒவ்வொரு வணிகரும் அனைத்து 29 இணைப்புகளையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. உதாரணத்திற்கு பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு தளவாட சாமான்கள் எதுவும் கொள்முதல் செய்யவில்லை என்றால் இணைப்புகள் 13 மற்றும் 14 தாக்கல் செய்ய வேண்டியதில்லை. அதே போல கொள்முதல் செய்த சரக்குகளை திரும்ப அனுப்பவில்லை என்றால் இணைப்பு 5 தாக்கல் செய்ய வேண்டியதில்லை. மதிப்புக் கூட்டு வரி செலுத்தி படிவம் சமாப்பித்தால் இருப்புச் சரக்கு தொடர்பான படிவம் 29 தாக்கல் செய்ய வேண்டியதில்லை. படிவம் ஐ நமூனாவிற்கு முதலில் இணைப்புகளை தாக்கல் செய்தால் கணினியே தாமாக படிவம் ஐ நமூனாவினை உருவாக்கும். அதில் ஒரு சில குறிப்பிட்ட கொள்முதல் மற்றும் விற்பனை விவரங்களை இணைப்புகளில் கொடுக்க இயலாததால் ஐ நமூனாவில் பூர்த்தி செய்ய வேண்டும். வலைத் தளத்தில் தமிழில் தகவல்கள் கொடுக்கும் சமயம் ஆங்கில எழுத்துக்கள் உபயோகப்படுத்த முடியாது என்பதால் படிவம் ஐ என்பது போல குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு இதே வலைத்தளத்தில் உள்ள ஆங்கில வலைத் தகவல்களையும் வணிக வரித் துறை இணைய தளத்தினையும் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
ஒரு குறிப்பிட்ட மாதத்தில் எந்தவிதமான கொள்முதலோ அல்லது எந்த விதமான விற்றுமுதலோ இல்லையெனில் “இல்லை” என்பதற்கான நமூனாவினை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். அதே போல டிஜிட்டல் கையெழுத்து வசதி இல்லாதவர்கள் கட்டாயம் நமூனாவில் கையெழுத்து போட்டு வணிக வரித் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
உள் மாநிலத்தில் பதிவு பெற்ற வணிகர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் 1, 5 மற்றும் 14.5 சதவிகித வரியுள்ள பொருட்கள் இருந்தால் இணைப்பு 1 தாக்கல் செய்ய வேண்டும்
ஸ்டாக் டிரான்ஸ்பர் மூலம் விற்பனை செய்வதற்கு 1, 5, மற்றும் 14.5 சதவிகித வரியுள்ள பொருட்கள் பதிவு பெற்ற வணிகருக்கு விற்பனைக்காக வரப் பெற்றால் இணைப்பு 2 தாக்கல் செய்ய வேண்டும்
பதிவு பெறாத வணிகர்களிடமிருந்து முதலாவது மற்றும் இரண்டாவது பட்டியலில் உள்ள பிரிவு 12ன் கீழ் வரி செலுத்த வேண்டிய பொருட்கள் கொள்முதல் செய்தால் இணைப்பு 3 தாக்கல் செய்ய வேண்டும்
உள் மாநில பதிவு பெற்ற வணிகர்களிடமிருந்தும் உள்மாநில பதிவு பெறாத வணிகர்களிடமிருந்தும் இரண்டாம் அட்டவணையில் உள்ள பொருட்கள் கொள்முதல் செய்தால் இணைப்பு 4 தாக்கல் செய்ய வேண்டும்
உள்மாநில பதிவு பெற்ற வணிகர்களிடமிருந்து கொள்முதல் செய்த 1, 5, மற்றும் 14.5 சதவிகித வரியுள்ள பொருட்கள் மீண்டும் அந்த வணிகர்களுக்கே திருப்பி அனுப்பி வைத்தால் இணைப்பு 5 தாக்கல் செய்ய வேண்டும்
காம்பவுண்டிங் முறையில் வரி செலுத்தும் வணிகர்களிடமிருந்து மற்றும் வருடாந்திர விற்பனைத் தொகை வரி செலுத்த வேண்டிய மொத்த விற்பனைத் தொகையினை விட குறைவாக இருந்து வரி செலுத்தாத வணிகர்களிடம் பொருட்கள் கொள்முதல் செய்தால் இணைப்பு 6 தாக்கல் செய்ய வேண்டும்
வரி விலக்கு பெற்ற பொருட்கள் கொள்முதல் செய்தால் இணைப்பு 7 தாக்கல் செய்ய வேண்டும்
வெளி மாநில வணிகர்களிடமிருந்து சி படிவத்துடனோ அல்லது சி படிவம் இல்லாமலோ சரக்குகள் கொள்முதல் செய்தால் (இ1 மற்றும் இ2 மற்றும் படிவம் எச் மற்றும் படிவம் ஐ கொடுக்கும் கொள்முதல் உள்பட) இணைப்பு 8 தாக்கல் செய்ய வேண்டும்
வெளி மாநில வணிகர்களிடமிருந்து சி படிவம் அல்லது பிற படிவங்களுடன் வரியுள்ள சரக்குகள் கொள்முதல் செய்தவைகளை திரும்ப அந்த வணிகருக்கே அனுப்பி வைத்தால் இணைப்பு 9 தாக்கல் செய்ய வேண்டும்
வெளி மாநிலத்தில் உள்ள கிளைகளிலிருந்து மற்றும் கன்சைன்மெண்ட் டிரான்ஸ்பர் மூலம் சரக்குகள் வரப்பெற்றால் இணைப்பு 10 தாக்கல் செய்ய வேண்டும்
வெளி நாடுகளிலிருந்த இறக்குமதி மூலம் சரக்குகள் சொந்தமாக கொள்முதல் செய்தாலோ அல்லது கடற்பரப்பு ஹை சீஸ் கொள்முதல் செய்தால் இணைப்பு 11 தாக்கல் செய்ய வேண்டும்
உள்ளீட்டு வரி வரவினை விற்பனையின் போது ஈடு செய்ய முடியாத இனங்களில் அரசுககே மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் இணைப்பு 12 தாக்கல் செய்ய வேண்டும்
விற்பனைக்கான சரக்குகளை உற்பத்தி செய்வதற்கு தளவாட சாமான்கள் ஏதேனும் கொள்முதல் செய்து இருந்தால் இணைப்பு 13 தாக்கல் செய்ய வேண்டும்
விற்பனைக்கான சரக்குகளை உற்பத்தி செய்வதற்கு தளவாட சாமான்கள் கொள்முதல் செய்து தளாவாட சாமான்கள் கொள்முதல் செய்த சமயம் பில்லில் சுட்டிக் காட்டடப்பட்டிருந்த உள்ளீட்டு வரியினை வரியுள்ள சரக்குகள் உற்பத்தி செய்யும் சமயம் ஈடு செய்தால் இணைப்பு 14 தாக்கல் செய்ய வேண்டும்
முதலாம் அட்டவணையில் உள்ள 1. 5 மற்றும் 14.5 சதவிகித வரியுள்ள பொருட்களை உள்மாநில பதிவு பெற்ற வணிகர்களுக்கு விற்பனை செய்தால் இணைப்பு 15 தாக்கல் செய்ய வேண்டும்
முதலாவது அட்டவணையில் உள்ள 1, 5 மற்றும் 14.5 சதவிகித வரியுள்ள பொருட்களை வரி வசூலித்து உள் மாநில பதிவு பெற்ற முகவராக விற்பனை செய்தால் இணைப்பு 16 தாக்கல்; செய்ய வேண்டும்
முதலாவது அட்டவணையில் உள்ள 1, 5 மற்றும் 14.5 சதவிகித வரியுள்ள பொருட்களை உள்மாநில ஏஜெண்டுகள் மூலம் விற்பனை செய்தால் இணைப்பு 17 தாக்கல் செய்ய வேண்டும்
இரண்டாம் அட்டவணையில் உள்ள 4, 5, 14.5, 21.43, 25, 27, 29, 30, 58, 220, 250, 260, மற்றும் 270 சதவிகித வரியுள்ள மற்றும் வரி விலக்குள்ள பொருட்களை பதிவு பெற்ற வணிகர்களுக்கோ அல்லது பதிவு பெறாத வணிகர்களுக்கோ விற்பனை செய்தால் இணைப்பு 18 தாக்கல் செய்ய வேண்டும்
முதலாம் அட்டவணையில் உள்ள 1, 5 மற்றும் 14.5 சதவிகித வரியுள்ள பொருட்களை உள்மாநில பதிவு பெற்ற வணிகர்களுக்கு விற்பனை செய்து அவ்வாறு விற்பனை செய்யப் பட்ட சரக்குகள் திரும்ப வரப்பெற்றாலோ இணைப்பு 19 தாக்கல் செய்ய வேண்டும்
உள் மாநிலத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களிலுள்ள மற்றும் அட்டவணை 5 ல் சுட்;டிக்காட்டப் பட்டுள்ள உள் மாநிலத்தில் உள்ள நிறுவனங்களுக்கு சரக்குகள் வரி யில்லாமல் பூஜ்ய வரி விகிதத்தில் விற்பனை செய்தாலோ இணைப்பு 20 தாக்கல் செய்ய வேண்டும்
உள் மாநில பதிவு பெற்ற வணிகர்களுக்கு வரி விலக்கு உள்ள பொருட்களை விற்பனை செய்தால் இணைப்பு 21 தாக்கல் செய்ய வேண்டும்
முதலாம் அட்டவணையில் உள்ள பொருட்களை வெளி மாநிலங்களுக்கு சி படிவம் பெற்றோ அல்லது சி படிவம் பெறாமலோ மற்றும் இரண்டாம் அட்டவணையில் உள்ள பொருட்களை சி படிவம் இல்லாமலோ விற்பனை மேற்கொண்டால் இணைப்பு 22 தாக்கல் செய்ய வேண்டும்
முதலாவது அட்டவணையில் உள்ள பொருட்களை சி படிவம் பெற்றுக் கொண்டு மற்றும் இரண்டாவது அட்டவணைகளில் உள்ள பொருட்களை சி படிவம் பெறாமல் வெளி மாநில வணிகர்களுக்கு விற்பனை செய்து அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் வெளி மாநில வணிகர்களால் திரும்ப அனுப்பப்பட்டு வெளிமாநில விற்பனை செய்த வணிகருக்கே திரும்ப வரப் பெற்றாலோ இணைப்பு 23 தாக்கல் செய்ய வேண்டும்
வெளி மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கு கிளை மாற்றம் பிராஞ்ச் டிரான்ஸ்பர் மற்றும் கன்சைன்மெண்ட் டிரான்ஸ்பர் மூலம் வெளி மாநிலங்களுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டால் இணைப்பு 24 தாக்கல் செய்ய வேண்டும்
வெளி நாடுகளிலிருந்து வரப்பெற்ற பொருட்கள் இந்திய கடற்பரப்பு எல்லைக்கு அப்பால் கடற் பரப்பில் இருக்கும் போதே பிற வணிகர்களுக்கு மாற்றம் செய்யப் பட்டால் (ஹை சீ சேல்ஸ்) இணைப்பு 25 தாக்கல் செய்ய வேண்டும்
வெளி நாடுகளுக்கு சரக்குகள் வணிகரால் நேரடியாக ஏற்றுமதி செய்யப்பட்டால் இணைப்பு 26 தாக்கல் செய்ய வேண்டும்
ஏற்றுமதி செய்வதன் பொருட்டு பொருட்களை பிற வணிகர்களுக்கு விற்பனை செய்து மத்திய விற்பனை வரிச் சட்டம் பிரிவு 5(3) ன் படி வரி விலக்கு கோரப் பட்டால் இணைப்பு 27 தாக்கல் செய்ய வேண்டும்
வெளி மாநிலங்களிலிருந்து சரக்குகள் தமக்கு வருவதற்கு முன்னரே பிற வணிகர்களுக்கு பொருட்களை கையாளாமல் ஆவணங்களிலேயே பிற வணிகர்களுக்கு மாற்றம் செய்தமையினால் (டிரான்சிட் சேல் மற்றும் இ1 இ2 சேல்) மத்திய விற்பனை வரிச் சட்டம் பிரிவு 6 (2) ன் படி வரி விலக்கு கோரப்பட்டால் இணைப்பு 28 தாக்கல் செய்ய வேண்டும்
படிவம் ஐ மற்றும் படிவம் 1 நமூனாக்களை தாக்கல் செய்யும் சமயம் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் மீதான வரித் தொகையினை விட உள்ளீட்டு வரித் தொகை அதிகமாக இருந்து அடுத்த மாதத்திற்கு கொண்டு செல்லப் பட்டால் இணைப்பு 29 தாக்கல் செய்ய வேண்டும்
படிவம் கே சமர்ப்பிக்கும் வணிகர்கள் கீழ்க் காணும் பட்டியல்களை தாக்கல் செய்ய வேண்டும்
பதிவு பெற்ற வணிகர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பொருட்கள் தொடர்பான பட்டியல் இணைப்பு 1 தாக்கல் செய்ய வேண்டும்
பதிவு பெறாத வணிகர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பிரிவு 12 ன் கீழ் கொள்முதல் வரி செலுத்தப் பட வேண்டிய பொருட்கள் தொடர்பான பட்டியல் இணைப்பு 2 தாக்கல் செய்ய வேண்டும்
வரி விலக்கு உள்ள பொருட்கள் கொள்முதல் செய்தது தொடர்பான பட்டியல் இணைப்பு 3 தாக்கல் செய்ய வேண்டும்.
வருடாந்திர விற்பனை படிவம் ஐ-1 தாக்கல் செய்யும் வணிகர்கள் கீழ்க் காணும் பட்டியல்களை தாக்கல் செய்ய வேண்டும்
உள்மாநிலத்தில் கொள்முதல் செய்யப்படும் வரி விலக்கு பொருட்கள் தொடர்பான மற்றும் விற்பனைக்கு வரி விலக்கு பெற்ற வணிகர்களிடமிருந்து கொள்முதல் செய்த பொருட்கள் தொடர்பான பட்டியல்
உள்மாநில பதிவு பெற்ற வணிகர்களுக்கு விற்பனை செய்யப்படும் வரி விலக்கு பொருட்கள் தொடர்பான பட்டியல்